
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்த சீசனானது இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியது. அதன்பின் இத்தொடரின் முதல் லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, களமிறங்கிய வங்கதேச மகளிர் அணிக்கு சதி ராணி மற்றும் முர்ஷிதா கதுன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முர்ஷிதா கதுன் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை சதி ராணி 29 ரன்களிலும் விக்கெட்டை இழந்தர். பின்னர் களமிறங்கிய ஷோபனா ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய தாஜ் நிஹார் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் நிகர் சுல்தானா 18 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷோபனாவும் 36 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் பெரிதளவி ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.இதனால் வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் சஸ்கியா ஹார்லே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீராங்கனை சஸ்கியா ஹார்லே 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.