BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு அணியும் மற்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன், டி20 தொடர்களிலும் விளையாடி தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருவகின்றன.
அந்தவகையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயாயான இந்த தொடரானது அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகள் சட்டோகிராமிலும், அடுத்த இரண்டு போட்டிகள் டாக்காவிலும் நடைபெறுகின்றன.
Trending
மேலும் இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சிக்கந்தர் ரஸா தலைமையிலான இந்த இந்த டி20 அணியில் கிரேய்க் எர்வின், பிளசிங் முசரபானி, லுக் ஜோங்வா, ரியான் பார்ல், சீன் வில்லியம்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாகிப் அல் ஹசன் இந்த அணியில் இடம்பிடிக்காத நிலையில், நஜ்முல் ஹொசைன் சாண்டோ அணியை வழிநடத்துகிறார். இருப்பினும் கடைசி இரண்டு போட்டிகான வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பிடிப்பார் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இந்த அணியில் லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன் தமிம், மஹ்முதுல்லா, தஸ்கின் அஹ்மத், மெஹிதி ஹசன் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), லிட்டன் குமர் தாஸ், தன்சித் ஹசன் தமீம், தாவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி அனிக், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அஹ்மது, ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் ஷாகிப், பர்வேஸ் ஹொசைன் எமன், தன்வீர் இஸ்லாம், அஃபிஃப் ஹொசைன், சைஃபுதீன்.
வங்கதேசம் - ஜிம்பாப்வே போட்டி அட்டவணை
- மே 3: முதல் டி20, சட்டோகிராம்
- மே 5: 2ஆவது டி20, சட்டோகிராம்
- மே 7: 3ஆவது டி20, சட்டோகிராம்
- 10 மே: 4ஆவது டோட்டி, டாக்கா
- 12 மே: 5ஆவது டோட்டி, டாக்கா
Win Big, Make Your Cricket Tales Now