
Bangladesh squad: சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த லிட்டன் தாஸ் இலங்கை ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது ஜூலை 2ஆம் தேதி முதலும், டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் இதில் ஒருநள் மற்றும் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு, பல்லகலே, தம்புளா உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை ஒருநாள் தொடருக்கான மெஹிதி ஹசன் மிராஸ் தலைமையில் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.