இலங்கை - வங்கதேச தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!
வங்கதேச அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது.

வங்கதேச அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணியானது இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது எதிர்வரும் மே 25ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களை முடித்த கையோடு வங்கதேச அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளதாக இன்று அறிவிக்காப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கதேச அணியானது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தரப்பு தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் ஜூன் 17 முதல் 21ஆம் தேதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 25 முதல் 29ஆம் தேதி வரை கொழும்புவிலும் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஜூலை 2ஆம் தேதி முதலும், டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் கொழும்பு, பல்லகலே, தம்புளா உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - வங்கதேச தொடர் அட்டவணை
டெஸ்ட் போட்டிகள்:
- ஜூன் 17-21, முதல் டெஸ்ட், காலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், காலே
- ஜூன் 25-29, 2வது டெஸ்ட், சிங்கள விளையாட்டுக் கழகம், கொழும்பு
ஒருநாள் போட்டிகள்:
- ஜூலை 2 - முதல் ஒருநாள் போட்டி, ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம், கொழும்பு
- ஜூலை 5 - 2வது ஒருநாள் போட்டி, ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம், கொழும்பு
- ஜூலை 8 - 3வது ஒருநாள் போட்டி, பல்லேகேல் சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகலே
Also Read: LIVE Cricket Score
டி20 போட்டிகள்:
- ஜூலை 10 - முதல் டி20, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகலே
- ஜூலை 13 - 2வது டி20, தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானம், தம்புல்லா
- ஜூலை 10 - முதல் டி20, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகலே
Win Big, Make Your Cricket Tales Now