அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடடை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியை வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரை முடித்த கையோடு டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக வங்கதேச அணி அமெரிக்கா சென்று அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
Trending
நடப்பாண்டில் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரைக் கணக்கில் கொண்டு வங்கதேச அணி இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அதுமட்டுமின்றி இரு அணிகளும் மோது முதல் டி20 தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் வங்கதேசம் - அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது மே 21ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச அணி, அப்பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து மற்றும் நேபாள் ஆகிய அணிகளுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now