
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஹாபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணிக்கு ஜோ கிளார்க் - டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோ கிளார்க் மற்றும் டி காக் இருவரும் தலா 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேக் ஃப்ரெசர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் மேடின்சன் 18 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஃபிஞ்ச் - நாதன் வெல்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஆரோன் ஃபிஞ்ச் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.