
BCCI Announce Squad For T20I Series Against New Zealand, New Captain Named (Image Source: Google)
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. நவம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடர் நவம்பர் 21ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில் இத்தொடருகான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, புதிய கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் இத்தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.