ஆசிய கோப்பை 2022: இந்திய அணி அறிவிப்பு; ராகுல், அஸ்வினுக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி 6ஆவது அணியாக ஆசிய கோப்பையில் விளையாடும்.
ஆசிய கிரிக்கெட் அணிகளுக்கு ஆசிய கோப்பை தொடர் முக்கியமான ஒன்று. ஆசியளவில் யார் பெரிய அணி என்பதை தீர்மானிக்கும் தொடர் என்பதால் முக்கியமான தொடர். இந்தியா, பாகிஸ்தான் இடையே தான் கடும் போட்டி நிலவும்.
Trending
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிறைய வீரர்களுக்கு இடையே அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுவதால், ஆசிய கோப்பைக்கான அணி தேர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயம் காரணமாக அணியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர். மேலும் அக்ஸர் படேல், தீபக் சஹார், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கூடுதல் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார் , அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.
கூடுதல் வீரர்கள் - ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் படேல், தீபக் சஹார்.
Win Big, Make Your Cricket Tales Now