
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகாளை குவித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறிய சர்ச்சைகுறிய கருத்தானது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதிவில் "ரோஹித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக, இந்தியா இதுவரை கண்டதிலேயே மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகியதுடன், அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்களும் எழுந்தன இதனையடுத்து ரோஹித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து அவர் நீக்கினார். இருப்பினும் அப்பதிவை நகல் எடுத்திருந்த நபர்கள், மீண்டும் பதிவிட்டு அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.