இந்திய கிரிக்கெட்டை முதன்மையாக வைத்திருக்க நாங்கள் தயாராகிவிட்டோம் - ரோஹித் சர்மா!
ஒரு புதிய சகாப்தத்துடன் புதிய தொடக்கத்துடன், புதிய பயிற்சியாளருடன் இந்திய கிரிக்கெட்டை முதன்மையாக வைத்திருக்க நாங்கள் தயாராகிவிட்டோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அகியோர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோரும் அணிக்கு ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். இதுதவிர அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முதல் ஒருநாள் தொடராகவும் இது அமையவுள்ளது.
Trending
இப்படி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய தினம் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கு முன்னதாக பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசும் கணொளியைப் பதிவுசெய்துள்ளது. அக்காணொளியில் பேசியுள்ள ரோஹித் சர்மா, “என்ன ஒரு மாதம். வேடிக்கையாக இருந்தது. வரலாற்றில் பொறிக்கப்பட்ட சில நினைவுகளுடன் இத்தொடரை நாங்கள் எதிர்கொள்கிறோம்.
#TeamIndia | #SLvIND | @ImRo45 pic.twitter.com/jPIAwcBrU4
— BCCI (@BCCI) August 2, 2024
அத்தகைய தருணம் நம் வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கும். அதனால் விளையாட்டின் குறுகிய வடிவத்திற்கு எப்போது வேண்டுமானாலும் என்னால் வந்து விளையாட முடியும் என்று உணர்கிரேன். ஆனால் அதைப்பற்றி மறந்துவிடுங்கள். உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் என்னுடை நேரத்தை நான் ரசித்துவிட்டேன். அதிலிருந்து நகர்வதற்கு இது சரியான நேரம் என்று உணர்கிறேன். ஏனெனில் நாங்கள் மீண்டும் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.
ஒரு புதிய சகாப்தத்துடன் புதிய தொடக்கத்துடன், புதிய பயிற்சியாளருடன் இந்திய கிரிக்கெட்டை முதன்மையாக வைத்திருக்க நாங்கள் தயாராகிவிட்டோம். மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் இது. இப்போது நாங்கள் மீண்டும் களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதே ஆற்றல் மற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி மீண்டும் களம் இறங்கவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கே), பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனாகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹஸரங்கா, துனித் வெல்லலாகே, சாமிக்க கருணாரத்ன, அகிலா தனஞ்செயா, மொகம்து ஷிராஸ், மஹீஸ் தீக்ஷனா, அசித்த ஃபெர்னாண்டோ, இஷான் மலிங்கா.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர் அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 02 - கொழும்பு
- இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 04 - கொழும்பு
- மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 07 - கொழும்பு
Win Big, Make Your Cricket Tales Now