Advertisement

ENG vs AUS, ODI Series: தொடக்க வீரராக களமிறங்கும் பென் டக்கெட்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானா ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
ENG vs AUS, ODI Series: தொடக்க வீரராக களமிறங்கும் பென் டக்கெட்?
ENG vs AUS, ODI Series: தொடக்க வீரராக களமிறங்கும் பென் டக்கெட்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 17, 2024 • 12:16 PM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவேற்றியைப் பதிவுசெய்த 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 17, 2024 • 12:16 PM

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு, கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுநாள் முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Trending

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகிய நிலையில், ஹாரி புரூக் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியிலும் கூப்பர் கனொலி ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக பென் டக்கெட் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் அனுபவ தொடக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜேசன் ராய் உள்ளிட்ட வீரர்கள் நீக்கப்பட்ட காரணத்தால், அணியின் தொடக்க வீரர்கள் யர் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.

ஏற்கெனவே தொடக்க வீரர்களுக்கான இடத்தில் பில் சால்ட், வில் ஜேக்ஸ் உள்ளிட்டோரு இருக்கும் பட்சத்திலும் பில் சால்ட் தனது இடைத்தை உறுதிசெய்துள்ளார். அதேசமயம் வில் ஜேக்ஸ் பெரிதளவில் சோபிக்க தவறியுள்ளதால் அவரது இடம் கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் அணியின் தொடக்க வீரர் இடத்தில் பென் டக்கெட்டை பயன்படுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று அல்லது 4ஆம் வரிசையில் களமிறங்கி வந்த பென் டக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி தொடக்க வீரராக தனது பெயரை பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்காக இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பென் டக்கெட், அதில் ஒரு சதம், 3 அரைசதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement