Advertisement

கேப்டன்சியில் விராட் கோலியின் சாதனையை சமன்செய்தார் பென் ஸ்டோக்ஸ்!

ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற கேப்டன் பட்டியளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சமன்செய்துள்ளார்.

Advertisement
Ben Stokes equals Virat Kohli's record after England whitewash Pakistan in three-match Test series
Ben Stokes equals Virat Kohli's record after England whitewash Pakistan in three-match Test series (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 21, 2022 • 10:59 AM

17ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் நாட்டிற்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்திருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தனது சமீபத்திய தாக்குதல் பாணி பேட்டிங் முறையில் பாகிஸ்தான் அணியை நிலைகுலையச் செய்து தொடரை முழுவதுமாக வென்று ஒயிட் வாஷ் செய்திருக்கிறது!

Bharathi Kannan
By Bharathi Kannan
December 21, 2022 • 10:59 AM

பாகிஸ்தானின் மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகமான ஆடுகளத்தில் ஒரு வெளிநாட்டு அணி வந்து, ஒரு டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்று திரும்புவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனால் அதை இங்கிலாந்து அணி எளிதாகச் சாதித்துக் காட்டி இருக்கிறது.

Trending

பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கேப்டனாக பதவியேற்ற இந்த ஆண்டில் மொத்தம் பத்து போட்டிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். இந்தப் பத்துப் போட்டியில் ஒன்பது போட்டிகளை அவரது அணி வென்றிருக்கிறது!

இதற்கு முன்பு ஒரு கிரிக்கெட் ஆண்டில் ஒன்பது வெற்றிகளை பெற்ற கேப்டனாக இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரிக்கி பாண்டிங், கிரீம் ஸ்மித், மைக்கேல் வாகன், ஸ்டீவ் வாக், கிளைவ் லாயிட் ஆகியோர் பிறந்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பிறகு இந்த பட்டியலில் தற்பொழுது பென் ஸ்டோக்ஸ் இணைந்திருக்கிறார்.

இதில் ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் விராட் கோலி 2016ஆம் ஆண்டு ஒன்பது வெற்றி மட்டுமே பெற்றார் அதில் ஒரு தோல்வி கூட கிடையாது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் 10 போட்டிகளில் ஒரு போட்டியைத் தோற்று இந்த இலக்கை எட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் வெற்றி குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறும்போது ” நாங்கள் விளையாட விரும்பும் ஒரு செயல்முறையை பெற்றிருக்கிறோம். பல்வேறு வகையான ஆடுகளங்களில் விளையாடுவது ஒரு சவாலாகும். நாங்கள் பேட் மற்றும் பந்துடன் நன்கு இணைந்து செயல்பட்டோம். நாங்கள் பேட் செய்யும் விதம் குறித்து நிறைய பேசினோம். வீரர்கள் அனைவரும் சிறந்த பங்களிப்பை தந்தனர். பந்துவீச்சாளர்களும் இதில் உடன் வந்து சேர்ந்து கொண்டனர். இது எங்களுக்கு பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. ஒவ்வொரு வீரரும் தேவைப்படும் நேரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார்கள் ” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now