
அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது ஷமி ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதன்படி இந்திய அணியைச் சேர்ந்த வீரர்களே இரு குழுக்களாக பிரிந்து தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பயிற்சியின் போது இந்திய வீரர் கேஎல் ராகுல் காயமடைந்ததுடன், களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.