பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக கடுமையாக தயாராகும் ரோஹித் சர்மா - காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், ரோஹித் சர்மா பிங்க் பந்தில் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வ்ருகிறது.
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியதுடன், முதல் இன்னிங்ஸில் வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்சியளித்தது.
பின்னர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 104 ரன்களில் சுருட்டி 46 ரன்கள் முன்னிலையும் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 100 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
Trending
இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, பாட் கம்மின்ஸ், மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த டிராவிஸ் ஹெட் சதத்தை நெருங்கிய நிலையில் 89 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் 47 ரன்களுக்கும், அலெக்ஸ் கேரி 36 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 238 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
Hitman @ImRo45 has just completed his first nets session in Australia and even the commentators couldn’t keep calm!#TeamIndia #AUSvIND pic.twitter.com/vsonrdc2ud
— BCCI (@BCCI) November 25, 2024
இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். முன்னதாக குழந்தை பிறப்பின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
தற்சமயம் ஆஸ்திரேலியா சென்றடைந்த ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைந்துள்ளதால் அடுத்த போட்டியில் இருந்து அவர் மீண்டும் அணியின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக் ரோஹித் சர்மா பிங்க் நிற பந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now