ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமாகும் கோன்ஸ்டாஸ்; உறுதிப்படுத்திய பயிற்சியாளர்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் சாம் கோன்ஸ்டாஸ் இடம்பிடிப்பார் என அந்த அணி பயிற்சியாளர் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது.
தையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தது.
Trending
இதில் ஆஸ்திரேலிய அணியில் நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டு சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இந்திய அணியின் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளதை அடுத்து அவரது இடத்தை நிரப்பும் வகையில் அறிமுக வீரர் தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரானா நான்காவது டெஸ்ட் போட்டியில் சாம் கொன்ஸ்டாஸ் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது.
இதனை ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதிப்படுத்தியுள்ளார். அதேசமயம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த டிராவிஸ் ஹெட் தற்போது முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவர் குறித்து அதிகம் கவலையடைய தேவையில்லை என்றும் கூறியுள்ளார். மேற்கொண்டு காயம் காரணமாக விலகியுள்ள ஹேசில்வுட்டிற்கு பதிலாக ஸ்காட் போலண்ட் களமிறங்குவார் என்பதையும் மெக்டொனால்ட் உறுதிபடுத்தியுள்ளார்.
கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
Also Read: Funding To Save Test Cricket
கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.
Win Big, Make Your Cricket Tales Now