
Rishabh Pant injury: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடனும், ஷர்தூல் தாக்கூர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் டௌசன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.