Advertisement

ஆஷஸ் 2023: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆண்டர்சனுக்கு இடம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.  

Advertisement
ஆஷஸ் 2023: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு, ஆண்டர்சனுக்கு இடம்
ஆஷஸ் 2023: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு, ஆண்டர்சனுக்கு இடம் (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 17, 2023 • 03:28 PM

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும் முதல் இரு போட்டிகளில் நூலிழையில் மட்டுமே வெற்றி பறிபோனதால், அடுத்த இரு போட்டிகளில் வெற்றிபெற முடியும் என்று இங்கிலாந்து அணி காத்திருக்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 17, 2023 • 03:28 PM

குறிப்பாக 3ஆவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் அவுட் பந்துவீச்சு மிரட்டலாக இருந்ததால், இங்கிலாந்து அணியின் மீதும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பேஸ் பால் ஆட்ட முறையால் வெற்றிபெற முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், ஆட்டத்தின் 5 நாட்களையும் சுவாரஸ்யமாக்க முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிரூபித்து காட்டியுள்ளார். 

Trending

இருப்பினும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் நடப்பு ஆஷஸ் தொடரில் திணறி வருகிறார். இதற்கு இங்கிலாந்து நிர்வாகம் தரப்பில் அமைக்கப்படும் பிளாட் பிட்ச்கள் காரணமாக அமைந்துள்ளது. 40 வயதை எட்டியுள்ளதால், ஆண்டர்சன் ஸ்விங்கை மட்டுமே நம்பி வீச வேண்டியுள்ளது. இளம் வீரர்களை போல் 140+ வேகத்தில் பந்துவீச முடியாமல் திணறி வருகிறார். இதனால் ஆண்டர்சனுக்கு இதுவே கடைசி ஆஷஸ் தொடராக இருக்கும் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர். 

இதுவரை 181 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன், 688 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை படைப்பார். இந்த நிலையில் ஆண்டர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற பேசப்பட்டு வந்த நிலையில், நாளை மறுநாள் தொடங்கவுள்ள ஆஷஸ் போட்டியில் ஆண்டர்சன் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஓல்டு ட்ரஃபோட் மைதானத்தில் ஆண்டர்சனின் பெயரில் ஸ்டாண்ட் அமைத்துள்ள நிலையில், 4ஆவது ஆஷஸ் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பெயர் இடம்பிடித்துள்ளது. மேலும் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரும், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி, ஹாரி ப்ரூக் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். 

இங்கிலாந்து அணி: பென் டக்கெட், ஸாக் கிரௌலி, மொயின் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜானி பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.  

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement