டி20 உலகக்கோப்பை : இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த பிராட் ஹாக்!
நடப்பாண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடபெற இருந்த டி20 உலக கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகியா நாடுகளில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதனால் டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
குறிப்பாக, இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை என்ற விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.
Trending
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார்.
அவரது தேர்வின் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
மேலும் மூன்றாம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 4ஆம் வரிசையில் கேஎல் ராகுல், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ள பிராட் ஹாக், ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின் ஆல்ரவுண்டராக ஜடேஜாவை தேர்வு செய்த பிராட் ஹாக், மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹலை தேர்வு செய்துள்ளார்.
டி20 உலக கோப்பைக்கான பிராட் ஹாக்கின் இந்திய பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா, விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.
Win Big, Make Your Cricket Tales Now