கேமரூன் க்ரீனை ஆர்சிபி அணி வாங்கியது தவறான முடிவு - பிராஹ் ஹாக்!
பவுலிங் துறையில் மிகப்பெரிய வெற்றிடம் இருக்கும் நிலையில் கேமரூன் கிரீனை இவ்வளவு பெரிய தொகைக்கு பெங்களூரு வாங்கியது சரியான முடிவல்ல என்று முன்னாள் ஆஸ்திரேலிய பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
உலகப்புகழ்பெற்ற டி20 லீக் தொடரான இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 16 சீசன்களைக் கடந்து வெற்றிகரமான 17ஆவது சீசன் அடுத்த ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் விரைவில் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தேவையற்ற வீரர்களை கழற்றி விட்டு தேவையான சில முக்கிய வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கின.
குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக மும்பை இந்தியன்ஸ் வாங்கியது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதே போல மும்பையில் இருந்த ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை 17.5 கோடிகள் கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கியதும் ரசிகர்களை திருப்பி பார்க்க வைத்துள்ளது.
Trending
வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவரை ஓய்வு பெற்ற பொல்லார்ட்க்கு மாற்று வீரராக மும்பை பெரிய தொகை கொடுத்து வாங்கியது. இருப்பினும் கடந்த சீசனில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத அவரை விடுவித்து 17.50 கோடிகளை மும்பை மிச்சப்படுத்தியது. மறுபுறம் சாதாரணமாகவே ஓரிரு வீரர்களுக்காக பெரிய தொகையை கண்ணை மூடிக்கொண்டு செலவிடக்கூடிய பெங்களூரு இம்முறை கேமரூன் கிரீன் மீது விழுந்துள்ளது.
இந்நிலையில் ஹர்ஷல் படேல், ஹஸரங்கா, ஹசில்வுட் ஆகிய 3 முக்கிய பவுலர்களை விடுவித்ததால் பவுலிங் துறையில் மிகப்பெரிய வெற்றிடம் இருக்கும் நிலையில் கேமரூன் கிரீனை இவ்வளவு பெரிய தொகைக்கு பெங்களூரு வாங்கியது சரியான முடிவல்ல என்று முன்னாள் ஆஸ்திரேலிய பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கேமரூன் கிரீனை டிரேடிங் முறையில் வெளியேற்றி ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்காக பணத்தை மும்பை இந்தியன்ஸ் உருவாக்கியது. அதற்கு ஆர்சிபி தாக்குப் பிடிக்க முடியாமல் போனதால் இது ஒரு நல்ல பலனை அளித்துள்ளது. அவர்கள் கேமரூன் கிரீனை ஏலத்திற்கு செல்ல விடாமல் இங்கேயே வாங்கியுள்ளார்கள். குறிப்பாக ஏலத்தில் அவரை வாங்குவதற்கு இன்னும் சற்று அதிக தொகை தேவைப்படலாம் என்று பெங்களூரு நிர்வாகம் கருதுகிறது.
இருப்பினும் ஆர்சிபி அணியில் அவர் இவ்வளவு தொகைக்கு தகுதியானவரா? அவர்களுடைய அணியின் வரிசையை பார்க்கும் போது க்ரீனை வாங்கிய முடிவு சுமாரானது என்று நான் நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் பொருத்தமாக இருந்த அவர் பெங்களூரு அணியில் சரியானவராக தெரியவில்லை”
ஏனெனில் அவரை வாங்குவதற்கு பெரிய தொகை செலவழித்ததால் தரமான பவுலர்களை வாங்குவதற்கு தற்போது பெங்களூரு அணியிடம் நிறைய பணம் இல்லை. ஐபிஎல் தொடரை வெல்வதற்கு உங்களுக்கு குறைந்த இலக்கை கட்டுப்படுத்தக்கூடிய தரமான பவுலர்கள் தேவை. எனவே இது பெங்களூரு அணியின் தவறான முடிவு என்று கருதுகிறேன். அதே சமயம் கேமரூன் கிரீன் மற்ற அணியில் பொருத்தமானவராக இருந்திருப்பார்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now