
இந்திய அணியில் எல்லா காலக்கட்டத்திலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததில்லை. அந்த குறையை தீர்த்துவைத்தவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகபந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தான்.
ஐபிஎல்லில் 150-157 கிமீ வேகத்திற்கு மேல் பந்து வீசி அனைவரையும் கவர்ந்தார். அதன்விளைவாக இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பிடித்தார். கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான உம்ரான் மாலிக், இதுவரை 8 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடிய முறையே 13 மற்றும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உம்ரான் மாலிக் அசால்ட்டாக 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியவர் என்பதால் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் அவரை ஆடவைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறியிருந்தனர்.