-mdl.jpg)
கிரிக்கெட்டில் பல சாதனைகள் அடுத்தடுத்து முறியடிக்கப்பட்டாலும், சில லெஜண்ட்களின் சாதனையை இன்னமும் யாராலும் நெருங்க கூட முடியவில்லை. அதில் சச்சினின் 100 சதங்கள் சாதனை, முத்தையா முரளிதரனின் 800 விக்கெட்கள் சாதனையை இன்னமும் யாராலும் நெருங்க கூட முடியவில்லை. இடத்ல் 1994ஆம் ஆண்டில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷையர் அணிக்காக விளையாடிய பிரையன் லாரா, துர்கம் அணிக்கு எதிராக 501 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார்.
இந்த சாதனையை இன்றுவரை யாரும் தகர்க்கவில்லை. அதேபோல், 2004ஆம் ஆண்டில், இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்களை குவித்து வரலாறு படைத்தார். இந்த இரண்டு சாதனைகளையும், இன்றுவரை யாரும் தகர்க்கவில்லை. இன்னமும், அருகில்கூட யாரும் செல்லவில்லை. தற்போதைய காலகட்டத்தில், டெஸ்டில் 300 ரன்களை அடித்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுவதால், லாராவின் இந்த சாதனையை தகர்ப்பது மிகமிக கடினம் எனக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் தன்னுடைய இந்த அரிய இரண்டு சாதனைகளை யாரால் முறியடிக்க முடியும் என்று பிரையன் லாரா பரபரப்பான தன்னுடைய கருத்தை வெளியிட்டு பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “ஷுப்மன் கில் என்னுடைய இரண்டு சாதனைகளையும் முறியடிப்பார். இந்த புதிய தலைமுறை பேட்ஸ்மேன்களில் அவர் மிகவும் திறமையானவர். வரும் ஆண்டுகளில் அவர் கிரிக்கெட்டை ஆள்வார். நிறைய சாதனைகளை முறியடிப்பார் என்று நம்புகிறேன்.