
Wiaan Mulder Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் முற்சதம் அடித்ததுடன் 367 ரன்களைக் குவித்துள்ளார்.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் முற்சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இப்போட்டியில் அவர் பிரையன் லாராவின் 400 ரன்கள் என்ற சாதனையையும் முறியடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 367 ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தார்.
இதனால் அவர் வெறும் 33 ரன்களில் பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இது ரசிகர்களை அதிருப்தியடைய செய்ததுடன், தென் ஆப்பிரிக்க அணி மீது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், பிரையன் லாரா ஒரு ஜாம்பவான் என்றும், அந்த சாதனையை தக்கவைக்க அவர் தகுதியானவர் என்பதாலும் தான் இந்த இன்னிங்ஸை டிக்ளர் செய்ததாக வியான் முல்டர் தெரிவித்துள்ளார்.