
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தன் அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது இன்று தொடங்கியது. கொழும்புவிலூள்ள சிங்கள விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவுக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 91 ரன்களைச் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் விஸ்வா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு நிஷன் மதுஷ்கா - திமுத் கருணரத்னே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்களைச் சேர்த்தனர். இதில் நிஷன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 42 ரன்களுடன் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடந்தனர்.