
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க இருந்த இப்போட்டியானது மழை காரணமாக தமதமாகியுள்ளது. தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் இப்போட்டியானது கைவிடப்படுவதுடன், இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில் லங்கஷைர் அணிக்காக பட்லர் விளையாடி வந்த நிலையில், காயம் காரணமாக அவர் அத்தொடரில் இருந்து விலகினார். தற்சமயம் காயத்தில் இருந்து ஜோஸ் பட்லர் முழுமையாக குணமடையாத காரணத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து டி20 அணியின் கேப்டனாக பில் சால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
Harry Brook to captain England after injury rules Jos Buttler out! pic.twitter.com/nb1If06163
— CRICKETNMORE (@cricketnmore) September 15, 2024