கபில்தேவ், அஸ்வின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.

Jasprit Bumrah Breaks Kapil Dev Record: வெளிநாடுகளில் நடைபெற்ற சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
லார்ட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாது அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்டர்களை தடுமாற வைத்ததுடன் தனது 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
அதன்படி வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். முன்னதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் வெளிநாட்டு மண்ணில் 12 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜஸ்பிரித் பும்ரா 13 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
வெளிநாடுகளில் அதிக 5 விக்கெட்டுகள் (டெஸ்டில்)
- 13 - ஜஸ்பிரித் பும்ரா (64 இன்னிங்ஸ்)
- 12 – கபில் தேவ் (108 இன்னிங்ஸ்)
- 10 – அனில் கும்ப்ளே (121 இன்னிங்ஸ்)
- 10 - இஷாந்த் சர்மா (109 இன்னிங்ஸ்)
- 8 பகவத் சந்திரசேகர் (42 இன்னிங்ஸ்)
- 8 – ரவிச்சந்திரன் அஷ்வின் (71 இன்னிங்ஸ்)
இதுதவிர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சேனா நாடுகளில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா கூட்டாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் ஆக்ரம் 11முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜஸ்பிரித் பும்ராவும் 11ஆவது முறையாக இதனைச் செய்து சாதனையை சமன்செய்துள்ளார்.
சேனா நாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள்
- 11* - ஜஸ்பிரித் பும்ரா (62 இன்னிங்ஸ்)
- 11 - வாசிம் அக்ரம் (55 இன்னிங்ஸ்)
- 10 - முத்தையா முரளிதரன் (34 இன்னிங்ஸ்)
- 8 - இம்ரான் கான் (46 இன்னிங்ஸ்)
- 7 - கபில் தேவ் (62 இன்னிங்ஸ்)
மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையையும் ஜஸ்பிரித் பும்ரா முறியடித்துள்ளார். முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் 78 இன்னிங்ஸ்களில் 11 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜஸ்பிரித் பும்ரா 12 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
WTC-ல் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள்
- 12* - ஜஸ்பிரித் பும்ரா (69 இன்னிங்ஸ்)
- 11 - ரவிச்சந்திரன் அஸ்வின் (78 இன்னிங்ஸ்)
- 10 - பாட் கம்மின்ஸ் (94 இன்னிங்ஸ்)
- 10 - நாதன் லயன் (95 இன்னிங்ஸ்)
- 9 - பிரபாத் ஜெயசூர்யா (35 இன்னிங்ஸ்)
- 8 - ககிசோ ரபாடா (61 இன்னிங்ஸ்)
Win Big, Make Your Cricket Tales Now