
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி மோசமான தோல்வியுடன் வெளியேறியது. இதற்கு காரணம் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லாதது தான். இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறார். முதுகில் ஏற்பட்ட அழுத்த முறிவு காரணமாக பும்ரா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
அதன்பின் ஆஸ்திரேலிய தொடருக்குள் வந்த அவருக்கு காயத்தின் தன்மை அதிகரித்ததால் டி20 உலகக்கோப்பையில் விளையாட முடியாமல் போனது. இந்திய அணி டி20 உலகக்கோப்பைத் தொடரின் அடைந்த தோல்விக்கு பின், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என தோற்றது.
தற்போது வங்கதேசத்துடனான 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-1 என்ற கணக்கில் தோல்விகளை சந்தித்து ஏமாற்றியிருக்கிறது. இந்த நிலையில் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட உள்ள அட்டவணையை தற்போது பிசிசிஐ சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதன்படி இந்திய அணி அடுத்ததாக இலங்கையுடன் மோதவுள்ளது.