
'Bumrah Is Not Officially Ruled Out Of T20 World Cup; We're Still Hopeful': Team India Head Coach Ra (Image Source: Google)
டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், காயத்தால் தென் ஆப்பிரிக்க தொடரில் ஆடமுடியாமல் விலகிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா டி20 உலக கோப்பையில் ஆடுவாரா என்பதே பெரிய கேள்வியாக இருந்துவருகிறது.
முதுகுப்பகுதியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார் பும்ரா. பும்ராவின் இந்த காயம் சரியாக 6 மாதமாவது ஆகும் என்று தெரிகிறது. எனவே பும்ரா டி20 உலக கோப்பையில் ஆட வாய்ப்பேயில்லை.
வலி நிவாரணி எடுத்துக்கொண்டு ஆடலாம். ஆனாலும் அவரால் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. மேலும் அப்படி ஆடினால் அவரது காயம் தீவிரமடைய வாய்ப்புள்ளது. எனவே பும்ரா விஷயத்தில் பிசிசிஐ பொறுமை காக்கவேண்டும் என்று ஐசிசி மருத்துவர் தெரிவித்தார்.