ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவர் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கிறார் என்றும் அர்த்தம் - ராபின் உத்தப்பா!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் கம்பேக் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சை எடுத்துக் கொண்டால் முதலாவதாக கபில்தேவ் அவருக்கு அடுத்த காலக்கட்டத்தில் ஸ்ரீநாத் அடுத்து அகர்கர் பிறகு ஜாகிர் கான் இவர்களுக்கு ஒரு பெரிய இடம் இருக்கிறது. இவர்களுக்கு அடுத்து தற்போதைய காலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சு துறையை உச்சத்தில் எடுத்துச் சென்றவர் ஜஸ்பிரித் பும்ரா. வித்தியாசமான ஆக்ஷனில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் விதவிதமான வகையில் இவர் வீசும் வேகம் பந்து வீச்சு அச்சுறுத்தாத பேட்ஸ்மேன்களே கிடையாது.
இவருடைய சிறப்பான இவருடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சன்தான் இவருடைய எதிரியாகவும் தற்பொழுது மாறி இருக்கிறது. இவரது பந்து வீச்சு முறையால் இவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் தற்பொழுது இவரை விளையாட விடாமல் செய்து வருகிறது. இதற்கு எந்தவித மருத்துவமும் கிடையாது ஓய்வுதான் மருத்துவம் என்பது குறிப்பிடத்தக்கது.
Trending
தற்பொழுது இவர் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, “அவர் கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். அவர் முழு ஐபிஎல் தொடரில் விளையாடினால் அது அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் நம்பிக்கை அடிக்கக்கூடிய ஒன்றாக அமையும். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவர் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கிறார் என்றும் அர்த்தம்.
அவர் இப்பொழுது பதில்களை விரும்பும் இடத்தில் இருக்க வேண்டும். உண்மையில் தனக்கு என்ன நடக்கிறது? நான் ஏன் குணமடையவில்லை? என்று அவர் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் எல்லாவிதமான வசதிகள் இருந்தும் என்சிஏ ஏன் குணமாக்கவில்லை மேலும் இது குறித்து ஏன் வெளிப்படையாக எதையும் கூறவில்லை என்று தெளிவுபடுத்த வேண்டும்” என்று தெருவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now