
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தனது முதல் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) மார்ச் 23 அன்று சென்னையில் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்றுள்ள இரு அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதேசமயம் இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இத்தொடர் ஆம்பிம்பதற்கு முன்னரே மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகிவுள்ளது.
அதன்படி அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது காயம் காரணமாக இத்தொடரின் சில போட்டிகளை தவறவிடுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் போது பும்ரா தனது முதுகு பகுதியில் காயத்தை சந்தித்தாஅர். இதனால் அவர் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்தும் விலகினார்.