
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நட்சத்திர வீரர் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆசிய கோப்பை தொடங்கும் முன்பு இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்துக்கு சென்று விளையாடி இருக்கிறது.
இதில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. டி20 தொடரில் எப்போதும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படும் நிலையில் தற்போது புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார். பும்ரா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது உடல் தகுதியை எட்டி விட்டார். இதன் காரணமாக அவர் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
மேலும் சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் இந்த அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று சிஎஸ்கே அணியின் சிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, அதிரடி வீரர் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா ஆகியோரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.