
Buttler, Adil Rashid, Shaheen Among Nominees For ICC Player Of The Month Award For November (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கி வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் பந்துவீச்சாலர் ஷாஹின் ஷா அஃப்ரிடி, இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர், ஆதில் ரஷீத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அஃப்ரிடி டி20 உலக கோப்பை தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பல விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.