Advertisement

ரோஹித் சர்மாவுக்கு ஆதரவுக்காக பேசிய கேமரூன் க்ரீன்!

மும்பை அணிக்காக பல இக்கட்டான சூழல்களில் சிறப்பாக விளையாடிக் கொடுத்திருக்கிறார். ஆகையால் ரோஹித் சர்மா சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்று ஆதரவாக பேசியுள்ளார் கேமரூன் கிரீன்.

Advertisement
 Cameron Green plays down talks of Rohit Sharma’s poor form
Cameron Green plays down talks of Rohit Sharma’s poor form (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 09, 2023 • 02:57 PM

ரோஹித் சர்மாவிற்கு இந்த வருடம் தனிப்பட்ட பேட்டிங்கில் சரியாக அமையவில்லை. 10 போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். அதில் இரண்டு முறை டக் அவுட் ஆகியுள்ளார். ரோஹித் சர்மா இந்த சீசனில் மொத்தம் 184 ரன்கள் மட்டுமே அடித்து, சராசரியாக 20 ரன்கள் குறைவாக இருக்கிறார். கடைசி இரண்டு போட்டிகளில் இரண்டு டக் அவுட் ஆகி மோசமான பார்மில் இருக்கும் ரோஹித் சர்மா ஓய்வு எடுக்க வேண்டும். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 09, 2023 • 02:57 PM

மோசமான ஃபார்மில் இருப்பது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவிற்கு சிறந்தது அல்ல என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதற்கு முக்கியமான வீரர்? அவர் அணியில் இருப்பது எவ்வளவு முக்கியம் மற்றும் நம்பிக்கையை கொடுக்கிறது? என்று பேசி உள்ளார் கேமரூன் கிரீன்.

Trending

இதுகுறித்து பேசிய அவர், “மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா இவ்வளவு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பதை அவரது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் உணர்த்தும். 5 கோப்பைகளையும் பெற்று தந்திருக்கிறார். பல முக்கியமான போட்டிகளில் இக்கட்டான சூழல்களில் வென்று கொடுத்திருக்கிறார். அவர் அணியில் இருப்பது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது. விரைவாக பேட்டிங்கில் கம்பேக் கொடுப்பார். ஒரு போட்டியில் விளையாடி பார்மிற்கு வந்தாலே ரோஹித் சர்மா போன்ற வீரருக்கு போதுமானது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டரில் என்னைச் சுற்றி தலைசிறந்த இந்திய வீரர்கள் இருப்பது மிகுந்த நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது. டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் இருக்கின்றனர். இந்திய அணிக்கும் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனக்கு அடுத்ததாக சூரியகுமார் யாதவ் இருக்கிறார். டி20 போட்டிகளில் அவரை பற்றி சொல்லவே தேவையில்லை. ஆகையால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் பாதியில் எப்படி செயல்பட்டோமோ அதைவிட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement