
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதிலும் குறிப்பாக மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே மிக அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரு அணிகளும் 28ஆம் தேதி நடைபெறும் தங்களது முதல் போட்டியிலேயே ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர்.
சமீபத்தில் இந்திய அணியின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மூலம் ஒரு சில சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி அதில் 21 சிக்ஸர்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, இன்னும் 6 சிக்ஸர்கள் அடித்தால், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.