Advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேச vs இந்தியா - புள்ளி விரங்கள்!

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் புள்ளி விவரம் மற்றும் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். 

Advertisement
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேச vs இந்தியா - புள்ளி விரங்கள்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேச vs இந்தியா - புள்ளி விரங்கள்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 19, 2025 • 10:03 PM

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 19, 2025 • 10:03 PM

அந்தவகையில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்

Trending

இந்தியா-வங்கதேசம் நேருக்கு நேர்

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையில் மொத்தம் 42 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, அதில் இந்திய அணி 33 போட்டிகளிலும், வங்கதேசம் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் ஒரு போட்டி முடிவில்லாமல் அமைந்துள்ளது. மேற்கொண்டு ஐசிசி தொடர்களில் இரு அணிகளும் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 4 முறை இந்திய அணியும், ஒரு போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

உத்தேச லெவன்

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.

வங்கதேச உத்தேச லெவன்: நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா, ஜாகர் அலி, மெஹ்தி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப்.

Also Read: Funding To Save Test Cricket

வீரர்களின் சாதனை விவரங்கள்

  • இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 37 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14000 ரன்களை நிறைவு செய்வார். தற்போது, ​​ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்கார மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஒருநாள் போட்டிகளில் வேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது, ​​அவர் 103 ஒருநாள் போட்டிகளில் 197 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11000 ரன்கள் எடுத்த நான்காவது இந்திய வீரர் மற்றும் உலகின் பத்தாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இந்தியாவுக்காக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement