
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது வங்கதேசத்திற்கு எதிரான வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்யும். அதேசமயம் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.
அதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் நிச்சயம் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.