Advertisement

ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக பாகிஸ்தான் அணிக்கு போட்டி கட்டணத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 20, 2025 • 07:58 PM

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் கராச்சியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 20, 2025 • 07:58 PM

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த வில் யங் மற்றும் டாம் லேதம் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், தங்கள் சதங்க்ளையும் பதிவுசெய்து அசத்தினர். இதில் டாம் லாதம் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்களையும், வில் யங் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன்களையும் சேர்த்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய கிளென் பிலீப்ஸ் 61 ரன்களைச் சேர்க்க நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்களைச் சேர்த்தது.

Trending

இதையடுத்து, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சௌத் ஷகில் 6, முகமது ரிஸ்வான் 3, ஃபகர் ஸமான் 22 ரன்களில் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருப்பக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய பாபர் ஆசாம் அரைசதம் கடந்து 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் குஷ்தில் ஷா 69 ரன்களையும், சல்மான் ஆகா 42 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து சார்பில் மிட்செல் சான்ட்னர், வில்லியம் ஓ ரூர்க் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக பாகிஸ்தான் அணிக்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பாகிஸ்தான் அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதிப்பதாகவும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வானும் இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரனைக்கு வர தேவையில்லை என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement