பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய அணி ஏற்கெனவே கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பை நழுவவிட்டதால், இம்முறை கோப்பையை வென்று அசததுமா அல்லது கடந்த 2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற நியூசிலாந்து அணி இம்முறை மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டிகான நடுவர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி இப்போட்டிக்கான கள நடுவர்களாக பால் ரைஃபெல் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு போட்டியின் மூன்றாம் நடுவராக ஜோயல் வில்சனும், நான்காம் நடுவராக குமார் தர்மசேனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இல்லிங்வொர்த் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் கள நடுவரகாக செயல்பட்டார்.