
Cheteshwar Pujara Picks India England Test XI: இந்திய அணியின் முன்னாள் வீரர் சட்டேஷ்வர் புஜாரா தனது ஒருங்கிணைந்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் லெவன் அணியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்
இந்நிலையில் இந்தியா அணி வீரர் சட்டேஷ்வர் புஜாரா ஒருகிணைந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். புஜாரா தேர்வு செய்துள்ள இந்த அணியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அலெக்ஸ்டர் குக், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற இங்கிலாந்து ஜாம்பவான்களையும் அவர் புறக்கணித்துள்ளார்.