
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், தொடரை நடத்தும் நாடான இந்திய அணியும் வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரர்களும் அப்படியே விளையாடி சிறப்பாக ரன் சேர்த்தார்கள். அதே சமயத்தில் மிடில் ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக திரும்பி வந்து தாக்குதல் தொடுத்தார்கள்.
மேலும் வங்கதேச மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெறும் 256 ரன்களுக்கு சுருண்டு விட்டார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்கள் மற்றும் ஷுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து நல்ல அடித்தளத்தை உருவாக்கினார்கள்.
இதற்கு அடுத்து வந்த விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி அரைசதத்தை தாண்டினார். மேலும் அவர் 74 பந்துகளில் இருந்த பொழுது அவருக்கு சதத்திற்கு தேவைப்பட்ட ரன்களே, அணியின் வெற்றிக்கும் தேவையான ரன்களாக இருந்தது. இந்த நிலையில் அவரே மீதமிருந்த எல்லா பந்துகளையும் சந்தித்து எல்லா ரன்களையும் எடுத்து சதத்தை பூர்த்தி செய்தார். தற்பொழுது இது சமூக வலைத்தளத்தில் விமர்சனத்தை எழுப்பியது.