
டி20 கிரிக்கெட் என்றாலே எல்லோருக்கும் சட்டென மனதில் தோன்றும் ஒரு வீரரின் பெயர் என்றால் அது கிறிஸ் கெயில் தான். அதிரடியான தனது ஆட்டத்தினால் ரசிகர்களை கட்டி போட்டு உட்காந்து பார்க்க வைக்கும் திறமைசாலி ஆவார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் விளையாட்டு வலைதளத்தில் கேட்கப்பட்ட பிரபலமான 25 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் உங்களுக்கு எந்த மைதானம் ரொம்ப பிடிக்கும் என்கிற கேள்விக்கு, எனக்கு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதனாம் தான் மிகவும் பிடிக்கும் என்றும் ,அங்கு சிக்ஸர்களை அடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் எனாறும் பதிலளித்தார்.
உலகக் கோப்பை பற்றி பேச்செடுத்த பொழுது , மேற்கிந்திய தீவுகளுக்காக இன்னும் இரண்டு உலகக் கோப்பைகளில் பங்கேற்க விரும்புகிறேன் என்று கூறினார். மேலும் டி20 லெவன் போட்டியில் உங்களுக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டால் முதலில் எந்த மூன்று வீரர்களை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரையே நான் முதலில் தேர்ந்தெடுப்பேன் என்று பதில் கூறினார்.