
England Playing XI For The First Test Against India: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்துள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடியேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்க்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலியில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் காயத்திலிருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் மீண்டும் லெவனில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக இவர் கடந்த 2024ஆம் ஆண்டு பிறகு மீண்டும் இங்கிலாந்து அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அவருடன் இணைந்து பிரைடன் கார்ஸ் முதல் முறையாக சொந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுவரை அவர் நியூசிலாந்து, பாகிஸ்தானில் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.