
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இறுதி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றால் தொடரை சமன் செய்யும். இந்திய அணி வென்றால் தொடரை வெல்வதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்கின்ற நிலை இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய ஆடுகளங்கள் குறித்து மிகப்பெரிய சர்ச்சைகள் எழுந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் தரப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்திருக்கிறது. உஸ்மான் கவாஜா 180 ரன்கள் எடுத்து அசத்தியிருக்கிறார். இப்படியான ஆடுகளத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 47.2 ஓவர்கள் பந்து வீசி ஆறு விக்கட்டுகளை வீழ்த்தியதோடு 91 ரன்கள் மட்டுமே தந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “இந்த ஆடுகளத்தில் எவ்வளவு மெதுவாக பந்து வீசுகிறீர்களோ அந்த அளவிற்கு சிறப்பானது என்பதை அவர் இறுதியாகக் கண்டுபிடித்தார். அவர் பல ஐந்து விக்கட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் தட்டையான பேட்டிங் செய்ய சாதகமான இந்த ஆடுகளத்தில் முதல் மற்றும் இரண்டாவது நாளில் தற்பொழுது ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கேமரூன் கிரீனைத் தவிர மற்ற எல்லா விக்கட்டுகளையும் தனது சிறப்பான பந்தின் மூலம் வீழ்த்தினார்.