
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகாளை குவித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதனையடுத்து நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் திவீரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறிய சர்ச்சைகுறிய கருத்தானது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அவர் கூறிய கருத்தானது அரசியல் முதல் விளையாட்டு துறையில் உள்ள அனைவரின் எதிர்ப்பையும் சந்தித்து வருவதுடன், அவர் மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றது.