
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இந்திய அணிக்காக கிட்டத்திட்ட 250 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர், இன்று உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் காணொளி வாயிலாக தனது ஓய்வு முடிவினை அறிவித்திருந்தார்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிவர் தவான், ஒருநாள் போட்டிகளில் 6,793 ரன்களையும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 1759 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை 222 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் 2 சதம் மற்றும் 51 அரைசதங்களுடன் 6,769 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஷிகர் தவானிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிசிசிஐ, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர். இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் ஷிகர் தவான் விளையாடிய வந்த ஐபிஎல் அணியானது பஞ்சாப் கிங்ஸ் என அனைத்து தரப்பில் இருந்தும் ஷிகர் தவானுக்கு வாழ்த்து செய்திகள் குவிந்து வருகின்றன.