Advertisement

மீண்டும் கேப்டானாகிறார் டேவிட் வார்னர்; தடைய விலக்கிக்கொள்ள ஆஸி கிரிக்கெட் முடிவு!

கேப்டன் பொறுப்பை வகிக்க டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை விலக்கிக் கொள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 21, 2022 • 11:58 AM
Cricket Australia Amends Player Code Of Conduct, Captaincy Ban On David Warner To Be Lifted?
Cricket Australia Amends Player Code Of Conduct, Captaincy Ban On David Warner To Be Lifted? (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர். தற்போது 36 வயதாகும் டேவிட் வார்னர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இருப்பினும் களத்தில் அவர் செய்த குற்றத்திற்காக அணியை தலைமை தாங்கும் கேப்டன் பொறுப்பை அவர் வகிக்க வாழ்நாள் தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

கடந்த 2018ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க நாட்டில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடியது. அந்த பயணத்தில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விதிகளுக்கு அப்பாற்பட்டு பந்தை உப்புக் காகிதம் கொண்டு தேய்த்த குற்றத்திற்காக அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பாங்கிராஃப்ட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 

Trending


அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அணியை தலைமை தாங்கும் கேப்டன் பொறுப்பை வகிக்க டேவிட் வார்னருக்கு வாழ்நாள் தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். அந்த தடையை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும்  வார்னருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை விலக்கிக் கொள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. அதன்படி, வீரர்களுக்கான நடத்தை நெறிமுறைகளில் திருத்தம் செய்து ஒப்புதல் வாங்கியிருக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதன்மூலம் கேப்டன் பொறுப்பை வகிக்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து டேவிட் வார்னர் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். 

இதற்கு முன்பு அப்படி தடையை எதிர்த்து விண்ணப்பிக்க இயலாது. இதன்மூலம் வாழ்நாள் தடையை எதிர்த்து டேவிட் வார்னர் தகுந்த விளக்கம், ஆதரங்களுடன் விண்ணப்பிக்க முடியும். எல்லாம் சரியாக இருந்தால் அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை விலக்கக் கொள்வது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கும்.

முன்னதாக தனது கெரியரின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்துப் பேசியிருந்த வார்னர் “அடுத்த 12 மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாடுவது கடைசியாக இருக்கலாம். நான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். 2024ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன். எனக்கு வயதாகி விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நாம் எதை விரும்புகிறோமோ அதை அடைவதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement