நேற்று ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அமர்க்களமாக தொடங்கி இருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. உலகக் கோப்பைக்கு நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கும் விதமாக, முதல் போட்டியில் பலமான இங்கிலாந்து அணியை மிக எளிதாக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஐந்து முறை வென்ற ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கத்தில் அக்டோபர் 8ஆம் தேதி எதிர்கொள்கிறது. நடப்பு உலகக் கோப்பை பயணம் இந்திய அணிக்கு தமிழகத்தில் இருந்து துவங்குகிறது. இதற்கு முன்பாக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்சமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி இருந்தது.
மேலும் இந்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்பாராத அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்து வருகிறார்கள்.