
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் டேவிட் வார்னர். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இருப்பினும் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடர்களில் விளையாட ஆர்வமுடன் இருப்பதாகவும் அவர் சமீபத்தில் கூறினார்.
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் குற்றஞ்சாட்டப்பட்டு, அதற்காக விளையாட தடையும் பெற்றார். அதன்படி அந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித், அணியின் துணைக்கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு கேப்டனாக செயல்பட வாழ்நாள் தடையையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்திருந்தது. இதனால் கேப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித் அதன்பின், அணியில் சாதாரன வீரராக மட்டுமெ விளையாடி வந்த நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் அவரின் தடை நீக்கப்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு அவ்வபோது கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.