இந்த இரு அணிகள் தான் ஐபிஎல் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டன - ஏபிடி வில்லியர்ஸ்!
இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் ஒரு வீரர் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் வரை சென்று இருக்கிறார். இது கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாக கருதப்படுகிறது. இதே போன்று ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ், 20 கோடியே 50 லட்சம் ரூபாய் சென்று இருப்பதும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ பி டி வில்லியர்ஸ் இந்த இரண்டு வீரர்களுக்கும் அவ்ளோ பணம் தேவையா என்று கேள்வி கேட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், “இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான். இவர்கள் இருவருமே புத்திசாலித்தனமாக சில வீரர்களை குறைந்த விலையில் வாங்கி இருக்கிறார்கள். இப்படித்தான் மற்ற அணிகளும் செயல்பட்டு இருக்க வேண்டும்.
Trending
இரு அணிகளுமே அறிவைப் பயன்படுத்தினார்கள். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கவில்லை. பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் இருவருமே மிகச் சிறந்த வீரர்கள் தான் ஆனால் அவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். இதன் மூலம் வீரர்களுக்கு எவ்வளவு தேவை இருக்கிறது என்பதை தான் இது காட்டுகிறது.
இந்த மினி ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தேவை நிறைய இருந்தது. தேவை ஏற்படும்போது எப்போதுமே விலையும் அதிகரிக்கும். மும்பை அணியை எடுத்துக் கொண்டால் தில்ஷான் மதுஷங்கா, நுவான் துஷாரா என்ற இரண்டு திறமையான வீரர்களை வாங்கி இருக்கிறார்கள். அதை போல் ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் முகமது நபி ஆகியோரின் திறமைக்கு அந்த விலையில் எடுத்தது மும்பைக்கு சாதகமாக இருக்கும்.
ஏனென்றால் இது வீரர்களுமே அணிக்காக பல பங்களிப்பை கொடுக்கக் கூடியவர்கள். ஏற்கனவே பும்ரா அணியில் உள்ள நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க வீரர் கோயிட்சே, மதுசங்கா, துசாரா ஆகியோர் எல்லாம் அணியில் இணைந்து இருக்கிறார்கள். இதற்காக மும்பை வெறும் 15 கோடி ரூபாய் தான் செலவழித்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now