தங்களுக்கு சவாலாக இருக்கப்போகும் இந்திய வீரர் குறித்து பாட் கம்மின்ஸ் ஓபன் டாக்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் விராட் கோலியை சமாளிப்பது மிகவும் கடினம் என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ள வேளையில் அதற்கு முன்னதாக ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. செப்டம்பர் 20-ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே மொஹாலி சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்த டி20 தொடரில் தங்கள் அணிக்கு எதிராக சவாலாக இருக்கப்போகும் இந்திய வீரர் குறித்து நேற்று பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.
Trending
அப்போது பேசிய அவர், “கரோனா காலகட்டத்திற்கு பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வந்துள்ளோம். ஸ்டேடியம் முழுவதும் நிரம்பி வழியும் ரசிகர்கள் கூட்டத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது மிகவும் உற்சாகமாகவும், ரொம்ப ஜாலியாகவும் இருக்கும்.
கோடிக்கணக்கான மக்களை ஓரிடத்தில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு இந்திய மைதானங்களில் ஏற்படும். இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விராட் கோலி சவால் மிக்க வீரராக இருப்பார் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதோடு ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவர் சதம் அடித்திருந்தார். மேலும் அவர் ஒரு தரமான வீரர் எப்படியும் அவர் பார்மிற்கு வந்துவிடுவார் என்பது தெரியும்.
அந்த வகையில் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்திற்கு கோலி திரும்பியுள்ளதால் எங்கள் அணிக்கு எதிராகவும் அவர் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த நினைப்பார். எனவே அவரே இந்த தொடரில் எங்களுக்கு எதிராக சவாலான வீரராக இருப்பார்” என்று தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now