-mdl.jpg)
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டங்கள் இன்று முடிவடைகிறது. இதில் கௌகாத்தியில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின.
போட்டி தொடங்கும் முன்னே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தடைபட்டு, டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் திமுத் கருணரத்னே 8 ரன்களிலும், பதும் நிஷங்கா 30 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் சமரவிக்ரமா 39, சரித் அசலங்கா 12, தனஞ்செயா டி சில்வா 22 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுப்பக்கம் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய குசால் மெண்டிஸ் சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.